Monday, November 23, 2015

ஜூவி சர்வே.... என்ன தான் சொல்கிறது?

ஜூனியர் விகடன்ல ஒரு சர்வே...

முதலமைச்சராக ஜெயலலிதாவின் செயல்பாடு எப்படி?... என்று

சூப்பர்..ன்னு 27.95 சதவிகிதம் பேரும்..

மோசம்..., மிக மோசம்ன்னு 32.68 சதவிகிதம் பேரும்...

சுமார் தான் என்று 39.37 சதவிகிதம் பேரும்...
வாக்களித்திருக்கின்றார்கள்.

இதை நேரடியா நாம எப்படி புரிஞ்சிக்கலாம்ன்னா....
சூப்பர்ன்னு சொன்னவங்க அதிமுக ஆதரவாளர்கள்ன்னும்...
மோசம், மிக மோசம்ன்னு சொன்னவங்க திமுக ஆதரவாளர்கள்ன்னும்...
சுமார்ன்னு சொன்னவங்க எந்தக் கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளர்கள்ன்னும்...

எடுத்துக்கலாம். இந்த அடிப்படையில் பார்த்தால்...

தற்பொழுதைய நிலையில்...

திமுகவின் வாக்கு வங்கி 32.68 சதவிகிதமாகவும்
அதிமுகவின் வாக்கு வங்கி 27.95 சதவிகிதமாகவும்

இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதாவது அதிமுகவை விட திமுகவின் வாக்கு வங்கி 4.73 சதவிகிதம் கூடுதலாக இருப்பது அப்பட்டமாக பதிவாகியிருக்கிறது.

மீதமுள்ள அந்த 39.37 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் அதிக அளவில் எந்தப் பக்கம் சாய்கின்றார்களோ அந்த அணி ஆட்சி அமைக்கும் என்பது தான் யதார்த்த நிலை.

இந்த இடத்தில் தான் நாம் சற்று கவனமாக ஆராய வேண்டும். இந்த நடுநிலையாளர்களுக்கு ஜெயலலிதா ஆட்சியின் மீது திருப்தி இல்லாத காரணத்தால் தான் சுமார் என்று சொல்லியுள்ளார்கள். அதனால் அவர்களது வாக்குகள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு எதிராகவே விழும்... அல்லது அதிமுகவுக்கு விழாது என்று சொல்லலாம்.

அப்படியான அதிருப்தி நடுநிலையாளர்கள் திமுகவுக்கு வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஆளுங்கட்சியின் ஏற்பாட்டில் வைக்கோ தலைமையில் மக்கள்நல கூட்டியக்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுவதாக பெரும்பாலான அரசியல் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படையாகவே கருத்துக்களை முன் வைக்கின்றார்கள்.

அது உண்மையாகவே இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும். எப்படி இருந்தாலும், அந்த நடுநிலையாளர்களை நாம் ஏ பி சி என்ற மூன்று தரப்பாக பிரித்துக் கொள்ளளாம். (அப்படித்தான் பிரிவார்கள்) அந்த மூன்று பிரிவினரும் சற்றேரக் குறைய சம அளவு சதவிகிதத்தில் தான் பிரிந்து நிற்பாகள். 

அதில் ஏ என்ற பிரிவினர் பல்வேறு காரணங்களால் திமுக மீதும் கூட வெறுப்பில் இருப்பவர்களாக இருக்கக் கூடும். அப்படியான குறிப்பிட்ட சதவிகிதத்தினர் ஜெயலலிதா நல்லாட்சி தரவில்லை என்றாலும் பரவாயில்லை, திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்னும் மனநிலையில் வேறு வழியின்றி அதிமுகவுக்கே மீண்டும் வாக்களிப்போம் என்று எண்ணுகிற அந்த நிலையினை.....
...அந்த நிலையினைத்தான் தற்பொழுது உருவாகியுள்ள மக்கள் நல கூட்டியக்கம் தவிடு பொடியாக்கியிருக்கின்றது. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் மேற்படி மனநிலை கொண்ட... அதாவது ஜெயலலிதா ஆட்சி பிடிக்கா விட்டாலும் வேறு வழியின்றி அதிமுகவுக்கே வாக்களித்து தொலைய வேண்டும் என்று முடிவெடுக்கக் கூடிய அந்த குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்களுக்கான புகலிடமாகத்தான் இந்த மக்கள் நல கூட்டியக்கம் மாறப்போகின்றது...!!

அதாவது ஜெயலலிதா - வைக்கோ வின் இந்த ரகசிய ஏற்பாடு, சேம் சைடு கோல் அடித்த கதையாகத்தான் முடியும் என்பது என் அனுமானம்.

அந்த 39.37 சதவிகித நடுநிலையாளர்களில் இன்னொரு பிரிவான பி பிரிவினர்... இயல்பாகவே ஜெயலலிதா ஆட்சி சரியில்லை... அதனால் மீண்டும் திமுகவுக்கே வாக்களிப்பது தான் சரி. வேறு கூட்டணிக்கு வாக்களித்தால் அவர்களும் வெற்றி பெற முடியாது, மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வந்து விடும், ஆகையால் அதிமுகவுக்கு பதில் இந்த முறை திமுகவுக்கே வாக்களிக்கலாம் என்ற முடிவினை தெளிவாக எடுத்து விடுவார்கள்.

இதில் மூன்றாவது பிரிவான சி பிரிவினர் தான் கிட்டத்தட்ட உண்மையான அப்பாவி நடுநிலையாளர்கள். இந்த பிரிவினர் எப்பொழுதுமே நடப்பு ஆட்சி தனிப்பட்ட முறையில் தனக்கு சாதனையைத் தந்ததா? வேதனையைத் தந்ததா? என்ற நேரடிக் கேள்விக்கான பதிலின் அடிப்படையில் தான் வாக்களிப்பர்.
ஜெயலலிதா ஆட்சி சுமார் என்று சொன்ன காரணத்தினாலேயே இந்த பிரிவினரில் பெரும்பான்மையாயானவர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவைத்தான் எடுக்க முடியும். அப்படி எடுக்கும் பொழுது தங்களது வாக்குகள் எக்காரணம் கொண்டும் விரயமாகக் கூடாது என்பதில் தான் இந்தப் பிரிவினர் மட்டும் குறியாக... கவனமாக இருப்பார்கள்.

ஸோ.... அவர்கள் மூன்றாவது அணிக்கு வாக்களித்து விரயமாக்குவதை விட ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள திமுகவுக்கே வாக்களிக்கலாம் என்ற முடிவையே எடுப்பார்கள்.

இன்னும் கொஞ்சம் புளி போட்டு விளக்க வேண்டுமானால்.... நடுநிலையாளர்கள் மூன்றாக பிரிந்து அதில் ஒரு பிரிவு மக்கள் நல கூட்டியக்கத்திற்கும், ஒரு பிரிவு திமுகவுக்கும் பெரும்பான்மையாக வாக்களிக்க... மூன்றாவது பிரிவில் பெரும்பான்மை திமுகவுக்கும் சிறுபங்கினர் அதிமுகவுக்கும் என்று வாக்களிப்பர். மூன்றில் 1.60 திமுகவுக்கும் 0.40 அதிமுகவுக்கும், 1.00 மக்கள் நல கூட்டியக்கத்திற்கும் வாக்களிப்பர்.

ஆக மொத்தம் திமுக 46 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று (மேற் சொன்ன கணக்குப்படி 52 சதவிகிதம் பெற வேண்டும்) அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.

ஏனெனில் ஆண்ட்டி இன்கம்பன்ஸி என்கிற ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிமுகவுக்குத்தான் இருக்கின்றதே தவிர.... அதாவது கடந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருந்த காரணத்தால் தான் காங்கிரஸும், அதன் தமிழக கவுண்டர் பார்ட்டாக இருந்த திமுகவும் மண்ணைக் கவ்வின. அதன் பலனை அதிமுக முழுமையாக அறுவடை செய்தது.....! அதே போலத்தான், வரும் சட்ட மன்ற தேர்தல் நடப்பு மாநில ஆட்சிக்கான தேர்வு என்பதால், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை அதன் பலனை அதிமுகவின் நேரடி எதிரியான திமுகவுக்கு வழங்கும்.

இந்த மனநிலையை மக்கள் எப்படி உறுதிப்படுத்துகின்றார்கள் என்றால்..... அதே ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வியான யார் தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற கேள்விக்கு.....

திமுக தலைவர் கலைஞருக்கு ஆதரவாக 41.7 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளனர். கலைஞருக்கு அடுத்தபடியாக விஜயகாந்துக்கு அதாவது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகாரம் தந்த மக்களே... தற்பொழுது வெறும் 13.81 சதவிகித வாக்குகளை மட்டுமே தந்திருக்கின்றார்கள். கலைஞருக்கும் விஜயகாந்துக்குமான வித்தியாசமே 27.89 சதவிகிதம் இருக்கின்ற போது....

மக்கள் தற்பொழுதைய மனநிலையில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவை மட்டுமே முன்நிறுத்துகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.

ஆக 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது உறுதி...!!! உறுதி...!!! உறுதி...!!!




8 comments:

கரிகாலன் said...

கனவு காண்பதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறது .முன்றாவது அணி அ.தி.மு.கா வின் ஆதரவு பெற்ற அணி என்று எந்த அடிப்படையில் சொல்கிறது .ஜூ.வி ??

கொக்கரக்கோ..!!! said...

//முன்றாவது அணி அ.தி.மு.கா வின் ஆதரவு பெற்ற அணி என்று எந்த அடிப்படையில் சொல்கிறது .ஜூ.வி ??//

அதை ஜூவி சொல்லவில்லை...

கரிகாலன் said...

ஓ ! நீங்கள் சொல்வதா ? விகடன் இதழ்கள் தி.மு.க சார்பாகி நீண்டநாட்களாகிறது நண்பரே .
திமுக .அதிமுகா தமிழகத்தினை ஆண்டு சாதித்தவை போதும் நண்பரே .கருணாநிதியை மற்றும் ,ஜெயலலிதாவை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள் ? தமிழ் நாட்டுக்கு தேவை ஒரு மாற்றம் ?
அது மேற்படி இருவரும் இல்லாத ஒரு ஆட்சி காலத்தின் கட்டாயம் .
இருவரும் தமக்கு சொத்து சேர்த்ததுதான் மிச்சம் .

கரிகாலன் said...

உங்கள் பதிவை படிக்க முடியவில்லை .குரோம் உலாவியில் எப்போதும் துள்ளிக் குதிக்கிறது உங்கள் பதிவு .சரி செய்யவும்

கொக்கரக்கோ..!!! said...

திமுக ஆட்சியில் இருந்தபோது மட்டும் விகடன் திமுக சார்பாக இல்லாமல் போது ஏன் தோழரே?

vijayan said...

எப்படியாவது ஆட்சியைபிடித்து மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென்ற தி.மு.காவினரின் பொதுநல அக்கறை நம்மை புல்லரிக்க வைக்கிறது.

Anonymous said...

Kodanaatu kundhaani ya Vida DMK aatchi 10 times better.

கரிகாலன் said...

///திமுக ஆட்சியில் இருந்தபோது மட்டும் விகடன் திமுக சார்பாக இல்லாமல் போது ஏன் தோழரே?//

அப்பொழுது எல்லாம் விகடனில் பங்குகளை மாறன் சோதரர்கள் வாங்கவில்லை தோழரே.கனடாவில் இருக்கும் எனக்கே தெரிகிறது ? என்ன உடன்பிறப்பு நீங்கள் ?அதுசரி கருணாநிதியை இன்னுமா நம்புறீங்க????