Saturday, August 29, 2015

லயோலா கருத்துக்கணிப்பு - ஒரு பார்வை..


நேற்றைக்கு வைக்கோ திமுகவோடு கூட்டணி இல்லைன்னு அறிவித்த உடனேயே எனக்கு அடி மனதில் ஒருசந்தோஷம். ஏதோ ஒரு நல்ல செய்தி வரப்போகுதுன்னு...!!

இன்னிக்கு லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வந்து அதை உறுதிப்படுத்திவிட்டது..!

இதே லயோலா கல்லூரியின் கடந்த ஆண்டு (2014) கருத்துக்கணிப்பில்....   44 சதவிகிதம் மக்கள் ஆதரவு பெற்றிருந்த அதிமுக... இன்று வந்த கணிப்பில் 10 சதவிகித மக்களின் ஆதரவை இழந்து 34.6 சதவிகிதமாக சுறுங்கியிருக்கின்றது...!

அதே சமயம் கடந்த ஆண்டு (2014) கருத்துக்கணிப்பில் 26 சதவிகித மக்கள் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த திமுக... இன்றைய கணிப்பில்,  6 சதவிகித மக்களின் அமோக ஆதரவைப் பெற்று...  32,1 சதவிகிதமாக பிரம்மாண்டம் காட்டியுள்ளது.

இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருத்துக்கணிப்பு. அதாவது திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வங்கி சதவிகிதம் தற்பொழுது வெறும் 1.5 சதவிகிதம் மட்டுமே...!

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஒரு ஆளும் கட்சியால் தனது வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்வது கிட்டத்தட்ட இயலாத ஒரு காரியம். அதே சமயம், எதிர்க்கட்சிக்கு, தங்கள் வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்வது சிறிது சுலபமான காரியமும் கூட..!!

அந்த வகையில் இந்த 1.5 சதவிகித வாக்கு வங்கியை திமுக திட்டமிட்டு செயலாற்றினால் வெகு இலகுவாக இட்டு நிறப்பி...  இன்னும் கூடுதல் வாக்குகள் பெற்று நிச்சயம், ஆட்சியைப் பிடிக்கும்...!!

இந்த கருத்துக்கணிப்பில் வந்திருக்கும் இன்னொரு முக்கிய விஷயம்....

யார் அடுத்த முதல்வராக வர விருப்பம் என்ற கேள்விக்கு...

ஜெயலலிதாவுக்கு 31 சதவிகித ஆதரவும்...

திமுகவின் தலைவருக்கு 23.5 சதவிகித ஆதரவும்...

திமுகவின் பொருளாளருக்கு 28 சதவிகித ஆதரவையும்...

மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதை திமுகவினர் கொண்டாட வேண்டும்...! ஏனெனில் திமுக சார்பான முதல்வர் வேட்பாளருக்கு தமிழக மக்களில் 50 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர்...!!

திமுகவுக்கு அடுத்த படியாக அதிமுக சார்பு முதல்வர் வேட்பாளருக்கு வெறும் 31 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்...!!

அதாவது திமுக முதல்வருக்கும் அதிமுக முதல்வருக்கும் 19 சதவிகிதம் வித்தியாசம் இருக்கின்றது..!!

ஆகவே திமுகவை நெருங்க வேண்டுமானால் அதிமுக தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்து சிறிய கட்சிகளோடும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் மட்டுமே சாத்தியம்..!!

போயஸ் தோட்ட தூதுவர்கள் கோயம்பேடு, தாயகம், தைலாபுரம், கமலாலயம் என்று படையெடுக்க வேண்டியிருக்கும்...! விரைவில் அந்தக் காட்சிகள் அரங்கேறலாம்...!!!


3 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//வெறும் 1.5 சதவிகிதம் மட்டுமே...!//

34.6 - 32.1 = 2.5 , சரியா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அதாவது திமுக முதல்வருக்கும் அதிமுக முதல்வருக்கும் 19 சதவிகிதம் வித்தியாசம் இருக்கின்றது..!!//

(23.5 + 28 = 51.5)

51.5 - 31 = 20.5; சரியா?

விண்ணன் said...

தேமுதி - திமுக கூட்டணி அமைத்துக் கொண்டால் அடுத்த ஆட்சி திமுகவிற்குத் தான். அதே போல அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துக் கொண்டால் கூட திமுகவின் வாக்கு சதவீதம் உயரும் வாய்ப்புள்ளது. இரண்டும் நடக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் உறுதியாகிவிடும்.