Thursday, April 3, 2014

இதற்குப் பிறகும் தேவையா இட ஒதுக்கீடு?!


சமூகநீதின்னா என்ன? அதுக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் என்ன சம்பந்தம்? நாம தான் எல்லாரும் மேல வந்துட்டோமே? இதுக்கு மேலயும் இந்த இட ஒதுக்கீட்டு தேவையா?

இது இன்றைய இளைஞர்கள் அதாவது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏன்? சில தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மனதிலும் விதைக்கப்பட்டிருக்கின்ற ஒரு விஷ விருட்ச கேள்வி!!!

முதல்ல சமூக நீதிக்கு வருவோம்....

ஒரு குடியரசு அதாவது ஒரு நாடுன்னா எப்படி கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்?

அந்த நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவரும் சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும், எதையெதைச் செய்ய வேண்டும், அல்லது எதையெதைச் செய்யக் கூடாது, எது எதற்கு யார் யாருக்கு உரிமை இருக்கின்றது போன்ற அடிப்படையான வாழ்வாதார நிலைகளில்.....

சம உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த ஏற்றத் தாழ்வுகள் முதலில் சமன் செய்யப்பட வேண்டும். 

நேரடியாகச் சொல்ல வேண்டுமானால், அந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து குடிமக்களுமே எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம், எந்த வழிபாட்டுத் தலங்களிலும் எந்த மாதிரியான ஊழியம் வேண்டுமானாலும் செய்யலாம், எந்த இடத்திலும் வசிக்கலாம், யார் வேண்டுமானாலும் தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு யார் மாதிரி வேண்டுமானாலும் உடை உடுத்திக்கொள்ளலாம், வீடு கட்டிக்கொள்ளலாம், என்ற நிலை முதலில் அந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். 

இது தான் சமூக நீதி....  ஓக்கே இந்த இடத்தில் இட ஒதுக்கீடு எங்கே சார்வந்தது? அது எப்படி உள்ளே நுழைந்தது? 

இந்த சமூகநீதியை சட்ட வடிவில் பெறுவதற்கே ஒரு பாடு போராட்டங்களை நீதிக் கட்சியில் தொடங்கி, திக, திமுக என்று தொடர்ந்து நடத்திப் பெற்று... மிச்ச சொச்சமிருந்த அனைத்து உரிமைகளையும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சட்டம் போட்டு நிலை நாட்டப்பட்டது. 

ஓக்கே சார்... அதான் சமூக நீதிக்கு சட்டம் போட்டாச்சே??  எல்லாரும் சமம் என்று!!  பின்ன எதுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தீங்க?!!

உண்மை தான் தம்பி. சட்டரீதியான உரிமை அனைத்து குடிமக்களுக்கும் கொடுத்தாச்சு. யார் வேணாலும் எந்த படிப்பு வேணாலும் படிக்கலாம், யார் வேணாலும் எந்த வேலைக்கு வேணாலும் போகலாம். எல்லாத்துக்கும் சட்டம் வந்துடிச்சி ஆனா....

அப்பறம் என்ன ஆனா....  எல்லாரும் ஸ்கூலுக்கு போயி படிக்க வேண்டியது தானே? பிடிச்சி வேலைக்கு போக வேண்டியது தானே?!

அங்க தான் தம்பி பிரச்சினையே!!!

நாட்டுல இருக்குற 100 பேருல, 3 பேர் மட்டும் ஆயிரக் கணக்கான வருஷமா படிக்கிறதும், அரசு வேலைக்கு போறதும் அவங்களுக்கு வழங்கப்ப்ட்டிருந்த உரிமையாயிருந்தது. மத்த 97 பேரும் அவங்கவங்க குலத்தொழிலை மட்டும் செய்யனும்ங்கற மாதிரி சட்டம் போட்டு வாழ்ந்து வந்துட்டாங்க. அந்த 3 பேர் வாழுற தெருப்பக்கம் கூட இந்த 97 பேரும் போகக் கூடாதுங்கற அளவுக்கெல்லாம் ஆயிரம் வருஷமா வாழ்ந்தாச்சு....

இப்பத்தான் எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டுன்னு சட்டம் எல்லாம் போட்டு பாக்கி 97 பேருக்கும் சமமா வாழற உரிமையே கிடைச்சிருக்கு...  

நீ ஸ்கூலுக்குப் போயி படிக்கலாம்ன்னு சொன்னா அதுக்கு பணம் வேணாமா தம்பி? அப்படியே பணம் இருந்தாலும் பள்ளிகளை எல்லாம் நடத்தற அந்த அவாளெல்லாம் இவங்களூக்கு சீட்டு இல்லன்னு சொல்லும் போது என்ன தம்பி பண்ண முடியும்? அரசு பள்ளிகளுக்குப் போனாலும், அங்கேயும்... ஏற்கனவே படித்த சமுதாயத்தில் இருந்து வந்து தேர்வு எழுதற அவாளோடு போட்டி போட்டு இருக்குற சீட்டுல இடம் புடிக்க இந்த ஆயிரம் வருஷம் பின் தங்கிய மக்களால எப்படித் தம்பி முடியும்?

அதனால தான் இந்த 97 பேருக்காகவும் திக, திமுக போன்ற கட்சிகள் எல்லாம் மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பித்தன..

இவங்களுக்கு உரிமை கொடுத்தா மட்டும் போதுமா? 

ஆயிரம் வருஷமா அனுபவித்தவர்களூம் - அடிமைகளும் ஒன்றாக நின்று போராட முடியுமா? ஒரு பள்ளியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதச் சொன்னால், எழுதப்படிக்கவே தெரியாத இவர்கள் எப்படி தேர்வு எழுதி பள்ளிக்குச் செல்வார்கள்? படித்து வெற்றி பெறுவார்கள்? அப்படி படிக்காமல், கல்வி பெறாமல் இவர்களால் எப்படி பெரிய பெரிய அரசாங்க உத்தியோகத்திற்கு வர இயலும்?

என்ற நியாயத்தை அரசுக்கு எடுத்துரைத்து, போராடி, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் இம்மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தனர். 

அந்த இட ஒதுக்கீட்டின் பலனால் இந்த 97 சதவிகித மக்கள் தொகையைக் கொண்டிருந்த சமூகம், கொஞ்சம் கொஞ்சமாக... படிப்படியாக கல்விச் சாலைகளுக்குள் உள்ளே நுழைந்தது... அடுத்த தலைமுறை கல்வி பயின்றது... அதற்கு அடுத்த தலைமுறை அரசு வேலைகளுக்குச் சென்றது...  அதற்கு அடுத்த தலைமுறை உயர்கல்வி கற்க ஆரம்பித்தது... அதற்கு அடுத்த தலைமுறை அரசு மற்றும் நீதி மன்றங்களில் உயர்நிலைப் பதவிகளைப் பிடித்தது... அதற்கு அடுத்த தலைமுறை தொழில்முறைக் கல்விகற்க முற்பட்டது... அதற்கு அடுத்த தலைமுறை பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் முன்னேறியது... அதற்கு அடுத்த தலைமுறை தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு இல்லாமலேயே தகுதியின் அடிப்படையில் உயர் பொறுப்புக்களைப் பிடிக்கும் நிலைக்கு முன்னேறியது...  இன்றைய தலைமுறை வெளிநாடுகளுக்கு கூலித்தொழிலாளியாகச் செல்லாமல் பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்புக்களை ஏற்கின்ற நிலையோடு அங்கே வாழ்ந்துகொண்டிருக்கின்றது......!!!

ஓக்கே... ஓக்கே..... ஹும்.. அதான் இவ்ளோ தூரம் வந்தாச்சே... இதுக்கு மேலயும் இட ஒதுக்கீடு தேவையா சார்? பாவம் அவங்களும் தான் பிழைச்சிப் போகட்டுமே?!

தம்பி... முதன் முதலாக கல்விச்சாலையில் இட ஒதுக்கீட்டின் பலனாக நுழைந்தானே ஒரு ஆயிரம் காலத்து அடிமை... அவனுடைய இன்றைய தலைமுறை தான் நீ......!!

அவனுக்கு அடுத்தடுத்து நுழைந்த அடிமைகளின் தலைமுறைகள் இன்றைக்கு உனக்கு அடுத்தடுத்த கீழ் நிலைகளில் நின்று கொண்டிருக்கின்றார்கள்... அவர்களும் உன் இடத்திற்கு வர வேண்டும்....

அதே சமயம் இன்றைக்கும் ஒரு ஆயிரம் காலத்து அடிமை ஒருவன் முதன் முதலாக கல்விச் சாலையில் நுழைந்து கொண்டிருக்கின்றான்... அவன் தலைமுறையும் உன் இடத்திற்கு வர வேண்டும்...  இன்னும் மிச்சம் சொச்சமிருக்கின்ற அந்த ஆயிரம் காலத்து அடிமைகள் அனைவருமே கல்விச் சாலைகளில் முழுவதுமாக நுழைந்து உன் இடத்திற்கு வர வேண்டும் தம்பி...!!!!

ரயில் வண்டியின் இஞ்சினுக்கு அடுத்து உள்ள ஏஸி கோச்சில் நீ வந்து கொண்டிருக்கின்றாய்... வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடும் அகலமான நதியை உன் ஏஸி பெட்டி கடந்தவுடனேயே மற்ற பெட்டிகளை இஞ்சினினில் இருந்து கழட்டச் சொல்கிறாயே?!  இது நியாயமா தம்பி?!  அனைத்து பெட்டிகளும் ஆற்றைக் கடக்கின்ற வரை.... செல்ல வேண்டிய ஊருக்குச் செல்கின்ற வரை இஞ்சினோடு தானே தம்பி இணைந்திருக்க வேண்டும்?! அது தானே நியாயம்? அது தானே தர்மம்?!

ஆகவே உரிமை மறுக்கப்பட்ட உன்னுடைய கடைசி தோழன் உன் இடத்திற்கு வருகின்ற வரையிலும் இந்த இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்!!

ஒத்துக்கறேன் சார்....

என்னுடைய பார்வை முன்னாலேயே இருந்ததாலும், என் பக்கத்தில் இருந்தவர்களைப் பற்றி மட்டுமே எனக்குத் தெரிந்திருந்ததாலும், என் பாட்டனை முதல் பெட்டியில் ஏற்றி விட்டு கடைசி பெட்டியில் வந்து கொண்டிருக்கும் என் தோழனை எனக்குத் தெரியாமல் போய் விட்டது. மன்னியுங்கள் ஐயா!!  என்னுடைய கடைசிப் பெட்டி தோழன் வருகின்ற வரையிலும் இந்த இஞ்சினை ரயில் வண்டியில் இருந்து கழற்ற நான் அனுமதிக்க மாட்டேன். அதற்கு உறுதுணையாக இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் உதவியோடு, ரயில் இஞ்சினைக் கழற்ற முற்படுபவர்களை முறியடிப்பேன்...

இது சத்தியம்!!! 


7 comments:

Anonymous said...

Stupid article

Anonymous said...

பார்ப்பன மாமாக்கள் பதில் சொல்வார்களா

Unknown said...

நீங்கள் கூறுகிற ஆயிரம் ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்த அவாளில் பெரும்பாலோர் இப்போது வாழும் 97% மக்கள் அளவு வறுமையைப் பார்த்துத்தான் வளர்ந்திருக்கிறார்கள். அப்போது அவாள் வீட்டுப் பெண்கள் வேலைதேடி வெளியில் இறங்கியபோது கைகொட்டிச் சிரித்த பலர்தான் அவாளால்தான் தாழ்த்தப்பட்டோம் என்று பேசுகிறார்கள்.

அவாளில் பெரும்பாலோர் தமிழகத்திலிருந்து வேலைதேடி வெளியே சென்று உழைத்து உயர்ந்த்தவர்கள். அதிலும் பெரும்பாலோர் தரக்குறைவாகக் கருதப்பட்ட தட்டெழுத்து கற்றவர்கள்.

நாங்களும் அறிவில் சிறந்தவர்கள். நான் மட்டுமல்ல எனது சந்ததியினரும் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்று கேட்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். அதை வெளிப்படையாகப் பேசாமல் ஒருசாதியைச் சாடுகிறீர்களா.

தாங்கள் கூறும் கட்சி தப்போது சாதிகளையும் மதங்களையும் வைத்துப் பிழைக்குமளவுக்குத் தாழ்ந்துவிட்டதே. தாங்கள் இடஒதுக்கீடு கேட்கும் மற்ற மதத்தினரை எந்தச் சாதியினர் தாழ்த்தினார்கள். 15 வருடம் தமிழகத்தை ஆண்ட முதல்வருக்கு அந்தக் கட்சியிலிருந்து முதல்வராக இதுவரை ஒரு தாழ்த்தப்பட்டவர் கூடக் கிடைக்கவில்லையா. கிடைக்கவில்லை என்பது உங்கள் பதிலானால் அவாள்தான் 97% மக்கள் தாழ்ந்ததற்கு காரணம் என்று கூறுவதில் சிறிதும் உண்மையில்லை.

தங்களின் எழுத்திலிருந்த கண்ணியம் கருதி இந்த மடலை அனுப்புகிறேன்.

ந்ன்றி,

கோபாலன்

vijayan said...

ஆட்சிக்கு வருவதற்கு மட்டும் அவாளோடு கூட்டு சேரலாம் தப்பில்லை,யோக்கியமான சூத்திரன் நம்மை எதிர்த்தா நென்றால் பாப்பானோடு சேர்ந்து அவனை தோற்கடிக்கலாம்.சஞ்சீவிரெட்டிஎன்ற சூத்திரனை தோற்கடித்து கிரி என்ற பாப்பானை ஜெயிக்கவைக்கவில்லை.வடவர் எதிர்ப்பு,இந்தி எதிர்ப்பு,இட ஒதுக்கீடு எல்லாம் ஒரு பாவலாதான் யாரும் சீரியஸ் ஆக எடுத்துகொள்ளவேண்டாம்.

seenu said...

நீர் நிலைகளை ஒட்டி விவசாயம்,குடியிருப்பு,இயற்கையுடன் இயைந்த கடவுள் என குழுக்களாக வாழ்ந்த ஆதிமக்களை, கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்த நாடோடிகள் தங்களிடமிருந்த குதிரைகள்,உலோக ஆயுதங்கள் துணைகொண்டு அழித்தும் அடிமைபடுத்தியும் அவர்களின் நாகரிக வளர்ச்சியை தங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன் படுத்த தொடங்கி சுமார் 80 தலைமுறைகளாக வெற்றிகண்டுவந்துள்ளனர்.அதற்கு தங்கள் வசதிக்காக ஏற்படுத்திய வருண பாகுபாடு,மனு தர்மம்,இதிகாச கட்டுக்கதைகள் ஆகியவற்றின் துணைக்கொண்டு இன்றளவும் நம்மை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.இந்தகால கட்டத்தில் மூளை சார்ந்த வேலைகளை அவர்களும் உடலுழைப்பு சார்ந்த வேலைகளை நமக்கும் வருண பகுபாடு மூலம் பிரித்து கொடுத்து இன்றளவும் நமது சிந்தனை வளர்ச்சியை கட்டுக்குள் வைத்துள்ளனர்.
சுமார் 50 ஆண்டுகள் (வெறும் 2 தலைமுறைகள்) இடஒதுக்கீடு மூலம் அவர்களுக்கும், அவர்களின் சுக வளர்ச்சிக்கும் நாம் தடையாக இருப்பதாக எண்ணினால் முதலில் அவர்கள் குறைந்தது 40 தலைமுறைகள் நாம் மேற்கொண்ட வேலைளை மேற்கொள்ளட்டும். தற்பொழுது சுமார் மக்கள் தொகையில் 3-5 சதவிகிதமே உள்ளவர்கள் நாட்டின் மேல்தட்டு( ELITE) வேலைகளின் 90 சதவிகித ஆக்கிரமிப்பை கைவிட்டு பஞ்சமர், வால்மீகிகள் செய்யும் வேலைகளை செய்யட்டும். அதற்கு பிறகும் தேவையில்லை நமக்கு இடஒதுக்கீடு.
அவர்களும் வறுமையை பார்த்துதான் வளர்ந்தார்கள் எனில் வறுமைக்கான காரணத்தை பட்டியலிடட்டும். காரணத்தை ஆராய்வோம்.
இவர்கள் மட்டும் தான் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு சென்று முன்னேறியதாக மார்தட்டிகிறார்களே.
இத்தகைய கட்டுபட்ட சுழ்நிலையிலும் முன்னேறி வெளியிடங்களில் மின்னும் விண்மீகள் இவர்கள் பார்வைக்கு வரவில்லையா.
அடிமைகளாக தோட்ட வேலைக்கு சிங்களம்,தென் ஆப்பிரிக்கா,மலேசியா, சிசிலி ஆகிய நாடுகளுக்கு சென்ற நம்மவர்களின் முன்னேற்றம் அவர்களின் பார்வைக்கு தெரியவில்லையா? இங்கும் அவர்கள் ஆதிக்கத்திலிருந்து முழுதும் விடுபட்டால் இன்னும் நல்ல எதிர்கால தமிழகத்தை படைத்து காட்டுவோம் என அறைகூவல் விடுவோம்.


seenu said...

நீர் நிலைகளை ஒட்டி விவசாயம்,குடியிருப்பு,இயற்கையுடன் இயைந்த கடவுள் என குழுக்களாக வாழ்ந்த ஆதிமக்களை, கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்த நாடோடிகள் தங்களிடமிருந்த குதிரைகள்,உலோக ஆயுதங்கள் துணைகொண்டு அழித்தும் அடிமைபடுத்தியும் அவர்களின் நாகரிக வளர்ச்சியை தங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன் படுத்த தொடங்கி சுமார் 80 தலைமுறைகளாக வெற்றிகண்டுவந்துள்ளனர்.அதற்கு தங்கள் வசதிக்காக ஏற்படுத்திய வருண பாகுபாடு,மனு தர்மம்,இதிகாச கட்டுக்கதைகள் ஆகியவற்றின் துணைக்கொண்டு இன்றளவும் நம்மை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.இந்தகால கட்டத்தில் மூளை சார்ந்த வேலைகளை அவர்களும் உடலுழைப்பு சார்ந்த வேலைகளை நமக்கும் வருண பகுபாடு மூலம் பிரித்து கொடுத்து இன்றளவும் நமது சிந்தனை வளர்ச்சியை கட்டுக்குள் வைத்துள்ளனர்.
சுமார் 50 ஆண்டுகள் (வெறும் 2 தலைமுறைகள்) இடஒதுக்கீடு மூலம் அவர்களுக்கும், அவர்களின் சுக வளர்ச்சிக்கும் நாம் தடையாக இருப்பதாக எண்ணினால் முதலில் அவர்கள் குறைந்தது 40 தலைமுறைகள் நாம் மேற்கொண்ட வேலைளை மேற்கொள்ளட்டும். தற்பொழுது சுமார் மக்கள் தொகையில் 3-5 சதவிகிதமே உள்ளவர்கள் நாட்டின் மேல்தட்டு( ELITE) வேலைகளின் 90 சதவிகித ஆக்கிரமிப்பை கைவிட்டு பஞ்சமர், வால்மீகிகள் செய்யும் வேலைகளை செய்யட்டும். அதற்கு பிறகும் தேவையில்லை நமக்கு இடஒதுக்கீடு.
அவர்களும் வறுமையை பார்த்துதான் வளர்ந்தார்கள் எனில் வறுமைக்கான காரணத்தை பட்டியலிடட்டும். காரணத்தை ஆராய்வோம்.
இவர்கள் மட்டும் தான் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு சென்று முன்னேறியதாக மார்தட்டிகிறார்களே.
இத்தகைய கட்டுபட்ட சுழ்நிலையிலும் முன்னேறி வெளியிடங்களில் மின்னும் விண்மீகள் இவர்கள் பார்வைக்கு வரவில்லையா.
அடிமைகளாக தோட்ட வேலைக்கு சிங்களம்,தென் ஆப்பிரிக்கா,மலேசியா, சிசிலி ஆகிய நாடுகளுக்கு சென்ற நம்மவர்களின் முன்னேற்றம் அவர்களின் பார்வைக்கு தெரியவில்லையா? இங்கும் அவர்கள் ஆதிக்கத்திலிருந்து முழுதும் விடுபட்டால் இன்னும் நல்ல எதிர்கால தமிழகத்தை படைத்து காட்டுவோம் என அறைகூவல் விடுவோம்.

Natrajan said...

கடைசி பெட்டி முன்னே வராது. அதிலிருப்பவர்கள் தான் முன்னே வர வேண்டும். சரி.. இது ஒரு புறம். படிக்க வைக்க வசதியற்றவர்களுக்கு அரசு உதவி செய்தால் தான் நன்று. அதை விடுத்து படித்து நன்பதிப்பெடுக்காமல் உள்ள சிலரை, மதிப்பெண் பெற்றவர்களின் வாழ்வை கெடுத்து ஜாதி யால் பதவியில் உக்கார்ந்தால் நாடு விளங்கிடுமா? ஏழை மக்களுக்கு படிப்பதற்கு உதவலாம். ஆனால் முட்டாள்களை நிர்வாகத்தில் நுழைத்தால், நாட்டின் கதி? உங்கள் நியாயம் என்னவென்றால் , எப்படியோ ஒரு சமூகத்தினரின் கல்லரையிலாவது தங்களுக்கு வேண்டியவர்களின் வெற்றிச் சரித்திரம் எழுதப்பட வேண்டும். நல்ல நியாயம். இதுவல்லவோ மனித நேயம். இது தான் சமத்துவம். கொக்கரக்கோ.. நல்ல அரை கூவல்.