Tuesday, April 22, 2014

நாடாளுமன்ற தேர்தல் - ஒரு புள்ளிவிவரக் கணக்கு! # 3 (கோவை-தஞ்சை-திருவள்ளூர்-மயிலாடுதுறை-நாகப்பட்டிணம்)

1.நாகப்பட்டிணம் 

நாகப்பட்டிணம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

நாகப்பட்டிணம் பாராளுமன்ற தொகுதியில் 1) கீழ்வேளூர் 2) நாகப்பட்டிணம், 3) வேதாரண்யம், 4) திருவாரூர், 5) திருத்துறைபூண்டி மற்றும் 6) நன்னிலம்  ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் தலைவர் கலைஞரின் திருவாரூர் தவிர்த்து மற்ற் 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. ஆனாலும் வேதாரண்யத்தில் திமுகவின் 4 முறை வெற்றி வேட்பாளர் வேதரத்தினம் சீட் கிடைக்காமல் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு எதிராக களம் கண்டு 32.8 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாமிடம் பெற்ற காரணத்தால் அவர் மீண்டும் திமுகவில் இணைந்து விட்ட காரணத்தாலும் அவர் பெற்ற வாக்குகளையும் திமுக வாக்கு வங்கியில் இணைத்துக்கொள்கிறோம்.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 882789 (சராசரியாக 83.04 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 432394 (48.98%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 409306 ( 46.36%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 6260 (0.70%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (3% அதாவது 26484 வாக்குகள்)
2) காங்கிரஸ் (4% அதாவது 35311 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (432394) இருந்து கழித்தால் கிடைப்பது = 370599 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 8828 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 26484 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (370599 + 8828 + 26484) = 405911 (45.98%) வாக்குகள்.

இது தான் நாகப்பட்டிணம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (6.73% அதாவது 59412 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (5% அதாவது 44139 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 8828 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 52967 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (409306) இருந்து கழித்தால்....

(409306) - (59412 + 44139 + 8828 + 52967) = 243960 (27.63%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 405911 (45.98%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 243960 (27.63%)

வாக்கு வித்தியாசம் = 161951. 


இத் தொகுதியில் திமுக கூட்டணி பெற்றிருக்கின்ற சராசரி வாக்குகளில் இருந்து தலைவர் கலைஞருக்கான சிறப்பு வாக்கு வங்கியாக 13 சதவிகிதம் திருவாரூர் தொகுதியில் கூடியிருக்கின்றது. அந்த அந்த 13 சதவிகிதத்தில் சரி பாதியான 6.5 சதவிகித வாக்குகள் மட்டுமே திமுகவுக்கு திரும்ப வரும் என்று கணக்கிட்டால் இந்த வாக்கு வித்தியாசத்தில் (161951) இருந்து 57381 ஐ கழித்து மீதமுள்ள....

104570 வாக்குகள் வித்தியாசத்தில் நாகை மாவட்ட செயலாளர் திரு ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள் நான்காவது முறையாக நாடாளுமன்றம் செல்லவிருக்கின்றார்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (67.11%)

நாகப்பட்டிணம் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான 
பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 6260 (0.70%) + தேமுதிக - 59412 (6.73%) + பாமக - 26484 (3%) + மதிமுக - 17656 (2%) + மோடி அலைக்காக - 17656 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 26484 (3%) + ஐஜேகே - 2835 (0.32%)...

ஆக கூடுதல் = 156787 (17.76%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே திரும்புவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை நாகப்பட்டிணம் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
*****************************************************************************

2. மயிலாடுதுறை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு.....

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 1) மயிலாடுதுறை 2) கும்பகோணம், 3) பாபநாசம், 4) திருவிடைமருதூர், 5)பூம்புகார் மற்றும் 6) சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. 

இவற்றில் கடந்த தேர்தலில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கின்றது. மற்ற நான்கு தொகுதிகளில் இரண்டில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றில் பாமகவும் மற்றொன்றில் விசிகவும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கின்றன. 

** இந்த ஆறு சட்டமன்ற தேர்தல்களிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 946777 (சராசரியாக 82 சதவிகிதத்திற்கும் கூடுதலாக)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 414722 (43.80%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 472832 ( 49.94%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 9495 (1.00%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால் 

1) பாமக (4% அதாவது 37,871 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 18935 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (414722) இருந்து கழித்தால் கிடைப்பது = 357916 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2.48% அதாவது 19814 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் அக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம்)
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்....  என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28403 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (357916 + 19814 +28403) = 406133 வாக்குகள்.

இது தான் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (5.6% அதாவது 53019 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம்)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 14201 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2.48 % அதாவது 19814 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் (6% அதாவது 56807 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் இன்னொரு 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊட்கங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (472832) இருந்து கழித்தால்....

(472832) - (53019 +14201 + 19814 + 56807) = 328991 வாக்குகள்.

ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 406133 (42.90%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 328991 (34.75%)

வாக்கு வித்தியாசம் = 77142 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (77.5%)

வரும் தேர்தலில் 88 சதவிகித வாக்குப் பதிவு இருக்கும் என்று எடுத்துக்கொண்டால்...  மொத்த வாக்குகளான (இந்த முறை) 13 லட்சம் வாக்குகளில் பத்து சதவிகிதம் அதாவது 130000 (ஒரு லட்சத்தி முப்பதாயிரம்) வாக்குகளை பாஜக கூட்டணியும் காங்கிரஸும் பிரித்துக்கொள்ளும் (காங்கிரஸ் சார்பாக மணிசங்கர் ஐயர் நிற்பதால் பாஜக கூட்டணி வாக்குகளில் கணிசமான சேதாரம் இருக்கும். 

ஆக திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி மிகத்தெளிவான வெற்றியை மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் பெறும்.  இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம். 

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
********************************************************************************

3. திருவள்ளூர்
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் 1) கும்மிடிப்பூண்டி 2) பொன்னேரி, 3) திருவள்ளூர், 4) ஆவடி, 5) மாதவரம் மற்றும் 6) பூந்தமல்லி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1099873 (சராசரியாக 81.39 சதவிகிதம்)

**  திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 403439 (36.68%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 606683 ( 55.15%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 11467 (1.04%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (5% அதாவது 54993 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 32996 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (403439) இருந்து கழித்தால் கிடைப்பது = 315450 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 10999 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 32996 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (315450 + 10999 + 32996) = 359445 (32.68%) வாக்குகள்.

இது தான் திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (12.8% அதாவது 140784 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 16498 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 10999 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 76991 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (606683) இருந்து கழித்தால்....

(606683) - (140784 + 16498 + 10999 + 76991) = 361411 (32.86%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 359445 (32.68%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 361411 (32.86%)

வாக்கு வித்தியாசம் = -(1966) 


அதாவது இத் தொகுதியில் அதிமுக 1966 வாக்குகள் என்ற மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (65.54%)

திருவள்ளூர் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான

 பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 11467 (1.04%) + தேமுதிக - 140784 (12.8%) + பாமக - 54993 (5%) + மதிமுக - 21997 (2%) + மோடி அலைக்காக - 21997 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 43995 (4%) + ஐஜேகே - 1616 (0.14%)...

ஆக கூடுதல் = 296849 (26.99%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும். அதனால் இத் தொகுதியிலும் திமுக கூட்டணி கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகக் கடுமையாக உழைத்தால் திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
***************************************************************************

4. தஞ்சை
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் 1) தஞ்சாவூர், 2) திருவையாறு, 3) ஒரத்தநாடு, 4) பேராவூரணி, 5) பட்டுக்கோட்டை 6) மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை தவிர மற்ற 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 934100 (சராசரியாக 82.00 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 383606 (41.06%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 430974 ( 46.13%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 18999 (2.03%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (1% அதாவது 9341 வாக்குகள்)
2) காங்கிரஸ் (4% அதாவது 37364 வாக்குகள்)
3)எஸ்.எஸ்.பி. அதிருப்தி (சமூக) வாக்குகள் (3% அதாவது 28023 வாக்குகள்)

இந்த மூன்றையும் திமுக கூட்டணி வாக்குகளில் (383606) இருந்து கழித்தால் கிடைப்பது = 308878 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 18682 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28023 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (308878 + 18682 + 28023) = 355583 (38.06%) வாக்குகள்.

இது தான் தஞ்சை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (7.9% அதாவது 73794 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (3% அதாவது 28023 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 18682 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 56046 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (430974) இருந்து கழித்தால்....

(430974) - (73794 + 28023 + 18682 + 56046) = 254429 (27.23%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 355583 (38.06%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 254429 (27.23%)

வாக்கு வித்தியாசம் = 101154 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (65.29%)

தஞ்சை தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான 

பாஜக கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 18999 (2.03%) + தேமுதிக - 73794 (7.9%) + பாமக - 9341 (1%) + மதிமுக - 37364 (4%) + மோடி அலைக்காக - 28023 (3%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 28023 (3%) + ஐஜேகே - 9986 (1.06%)...

ஆக கூடுதல் = 205530 (22.00%)

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை தஞ்சை பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும், டி.ஆர். பாலுவின் மீதான எதிர்பார்ப்பும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

****************************************************************************
5. கோவை 

கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு.....

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் 1) கோவை வடக்கு 2) கோவை தெற்கு, 3) பல்லடம், 4) சூலூர், 5) கவுண்டம்பாளையம் மற்றும் 6) சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் 6 தொகுதிகளிலுமே திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1020762 (சராசரியாக 75.22 சதவிகிதம்)

**  திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 336490 (32.96%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 607278 ( 59.49%)


** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 33180 (3.25%)


இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) கொமுக (4% அதாவது 40830 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 20415 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (336490) இருந்து கழித்தால் கிடைப்பது = 275245 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (4.5% அதாவது 45934 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 30622 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (275245 + 45934 +30622) = 351801 (34.46%) வாக்குகள்.

இது தான் கோவை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (8.00% அதாவது 81660 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதத்திற்கும் 0.8% குறைவு)
2) கம்யூனிஸ்ட்டுகள் (5% அதாவது 51038 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (4.5 % அதாவது 45934 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (10% அதாவது 102076 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 7% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (607278) இருந்து கழித்தால்....

(607278) - (81660 +51038 + 45934 + 102076) = 326570 (31.99%) வாக்குகள்.

ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 351801 (34.46%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 326570 (31.99%)


வாக்கு வித்தியாசம் = 25231 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (66.45%)

கோவை தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி மற்ற தொகுதிகளை விட கொஞ்சம் வலுவாக இருப்பதால் அந்த கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 33,180 (3.25%) + தேமுதிக - 81660 (8%) + கொமுக - 40830 (4%) + மதிமுக - 20415 (2%) + மோடி அலைக்காக - 30622 (3%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 71453 (7%)...

ஆக கூடுதல் = 278160 (27.25%)

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை கோவை பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
===============================================================================

No comments: