Friday, March 14, 2014

ஜெவிடம் பல்லிளிக்கும் ஆம் ஆத்மியின் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு!!


இந்த ஆம் ஆத்மி கட்சி ஆ.ராசவை எதிர்த்து நிக்கிறேன், மோடிய எதிர்த்து நிக்கிறேன், ராகுல எதிர்த்து நிக்குறேன், தயாநிதி மாறனை எதிர்த்து நிக்குறேன்னு எல்லாம் பீலாவுட்டுக்கிட்டு ஊழலுக்கு எதிராக ஆயுதம் எடுத்திருக்கும் பரமாத்மாவாக திரியிறானுங்களே.....

வக்காளி, தைரியமும் நெஞ்சுல மஞ்சாசோறும் இருந்திச்சின்னா, மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனைபெற்ற ஒரு குற்றவாளி, மேல் முறையீட்டில் ஜாமீனில் இருக்கின்ற ஒரு ஊழல்பேர்வழி, தான் நியாயவாதியா இருந்திருந்தா அந்த கேஸை இழுத்தடிக்க 200 தடவை வாய்தா வாங்கியிருக்க மாட்டார், இதுக்கு மேல தன்னால வாய்தா வாங்க முடியாதுன்னுவுடனே, ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டிக்காட்டி அவர் தான் தனக்கு அரசு வழக்கறிஞரா....

...புரியுதா மக்களே, அதாவது தனக்கு எதிரா வாதாடி, தன்னை சிறையில் தள்ள வேண்டிய ஒரு வழக்கறிஞரை இன்னார் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வழக்குத்தொடுத்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பவர்....

தன்னால இதுக்கு மேல வாய்தா வாங்க முடியாத நிலையில்... அந்த அரசு வழக்கறிஞரையே வாய்தா மேல் வாயாதா... மன்னிக்கவும் வழக்கறிஞர் வாய்தா வாங்க சட்டத்தில் இடமில்லாத காரணத்தால், பத்தாங்கிளாஸ் இங்லீஷ் செகண்ட் பேப்பர்ல மனப்பாடம் பண்ணி எழுதி 15 மார்க் வாங்கின அந்த லீவ் லெட்டரை, கொஞ்சம் மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு நீதிபதிக்கு எழுதி வாய்தாவை நீட்டித்துக்கொண்டிருக்க....

ஒரு கட்டத்துல கடுப்பான நீதிபதி, 15 மார்க்கு போடுறதுக்கு பதிலா 65 ஆயிரம் அபராதம் போட்டுட்டாரு!!

இப்படியெல்லாம் ஒரு ஊழல் வழக்கில் தன்னை விடுவிக்க இயலாத நிலையில் அதன் தீர்ப்பிலிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக......

இந்த ஆம் ஆத்மி கட்சியினர் ஒரு சிறு துறும்பைக்கூட கிள்ளிப்போடவில்லையே ஏன்???????!!!!!

இது தான் என் கேள்வி....

ஆம் ஆத்மியின் மாநிலத்தலைவர்ன்னு சொல்லிக்கிற உதயகுமாரனும், சாயந்திரம் ஆனா பார்க்குல போயி உக்காந்து சம வயசு ரிடையர்ட் பார்ட்டிங்க கிட்ட கடலை போடுறதுக்கு பதிலா, திமுகவுக்கு எதிரான பரப்புரைகள் செய்யும் டீவில எல்லாம் போயி குந்திக்கிட்டு கலைஞரையும், திமுகவையும் திட்டித்தீர்த்துவிட்டு இப்போ ஆம் ஆத்மியில் ஐக்கியமாகியிருக்கும் ஞானி போன்ற மேதையாக நினைத்துக் கொண்டிருக்கும் சாணிகளோ.....

பெங்களூரு கோர்ட்ல நடக்கும் ஊழல் சம்பந்தமா ஜெயலலிதாவை எதிர்த்து இங்கே ஒரு போராட்டம் நடத்திட இயலுமா?????

ஒர் அரசு வழக்குறைஞர் மேலயே அபராதம் விதிக்கின்ற அளவிற்கு சட்டத்தை மிகக் கேவலமாக எண்ணி செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஒரு புல்லைப்புடுங்கியாவது இங்கே தமிழ்நாட்டில் இவர்களால் போட முடியுமா?????


அப்புடி ஒருவேளை இங்க வந்து போராட்டம் நடத்தினீங்கன்னா... உங்க சின்னைத்தை அந்தம்மா கையிலெடுத்து உங்களை எல்லாம் வாரிச் சுருட்டிவிடும்....  ஆமா!!!

அங்க ஒன்னும் புடுங்க முடியாம எவனாவது ஊழல் கீழல்ன்னு சொல்லிக்கிட்டு திமுக பக்கம் வந்தீங்க... நீங்கள்லாம் சாட்சத் பொட்டைங்க தான்!!!



2 comments:

Anonymous said...

நெற்றியடி ! பார்ப்போம் ஆஆக என்ன செய்கிறது என?! ஜெயலலிதா மக்களவை தேர்தலில் போட்டியிடுறாங்களா? நான் நினைச்சேன் மாநிலங்களவை குறுக்குச் சந்தாலா பிரதமர் கனவை நிறைவேற்றிப்பிடலாம் என்று கோதாவில் எறங்கிட்டாங்களோ என.. வாய்தா ராணிக்கு குறுக்குவழியா தெரியாது.

குறும்பன் said...

நான் ஆம் ஆத்மியின் அனுதாபி ஆனால் அவர்கள் ஜெயலலிதாவிற்கு எதிராக ஒருவரையும் நிறுத்தாமல் இருப்பதை ஏற்க முடியவில்லை. ஜெயா மோசமான ஊழல் பேர்வளி. ஆனாலும் அவர்களின் வேட்பாளர்கள் தான் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள். அதனால் இன்னும் நான் அவர்கள் அனுதாபியே.